இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது , இறக்குமதி செய்வது , ஒரு இடத்தில் இருந்து இன்னொரு கொண்டு செல்வது ,விற்பனை செய்வது என எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அனைத்தும் தடை செய்யப்படுகிறது என்றும் , இ-சிகரெட்டுக்கு விளம்பரம் கொடுப்பது கூட தடை செய்யபட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்ற புகையிலைப் பொருட்களுக்கு தடையில்லாதபோது, அதிக வரிவிதிக்க முடியும் என்ற சூழலில் இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/ShamikaRavi/status/1174318093402640384