அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமடைந்த ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேஜூ அஸ்வினி, அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
#EnnaSollaPogirai First Day shooting started and the whole team is vaccinated. The team is following all covid norms during the shoot.@i_amak @VijaytvpugazhO @ImHharan @muralikris1001 @DoneChannel1 @tridentartsoffl #JaMathivathanan @RubiniSakthi #TridentArts #Ashwin pic.twitter.com/xiVAmKLANn
— Trident Arts (@tridentartsoffl) July 19, 2021
மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதில் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.