லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
Welcome Onboard @AadhiOfficial for #RAPO19
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @srinivasaaoffl @NavinNooli @anbariv pic.twitter.com/utX4zVQQgJ
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 19, 2021
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஆதி பினிசெட்டி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .