சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருங்காலங்களில் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும் என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்நாட்டு அரசானது சலுகைகளை வழங்கி வருகிறது. இதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டித்தும் வருகிறது. இதனை அடுத்து சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தியர்களின் எண்ணிக்கையை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen கூறியதில் “மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் கட்டாயம் கொரோனா சான்றிதழை காட்டப்பட வேண்டுமென்ற விதி கொண்டு வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் தேசிய ஆணையத்தின் சுகாதார பிரிவின் தலைவரான Ruth Humbel “தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முககவசம் அணிய வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெடரல் சுகாதார தலைவர் Anne Lévyயும் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வருவதைவிட கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையானது மிகவும் சிறந்தது” என்று கூறியுள்ளார். இதனால் வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளதாவர்கள் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.