தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவரை இன்று நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ” தமிழக சட்டபேரவை நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசு தலைவரை அழைத்தேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறக்கவும் அழைப்பு விடுத்தேன். மூன்றாவது அலை வருவதை தடுக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் இப்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகளை திறப்பது குறித்து முறையாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.