Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோரவிபத்தில் பறிபோன உயிர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சேகர், வில்சன் ரஜினிராஜா, ரெனிஸ் வாலன், செல்வம், அதிர்ஷ்ட பாலன், ஸ்டீபன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் பொன்சேகர், வில்சன் ரஜினி ராஜா ஆகிய இருவரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு காரில் இவர்கள் 6 பேரும் பெட்டைகுளம் கிராமத்துக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மன்னார்புரம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த காரானது தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பொன்சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் மற்ற 5 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் சாலையோரம் கிடந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த 5 பேரையும் உடனடியாக மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வில்சன் ரஜினிராஜா, ரெனிஸ் வாலன் ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின் படுகாயமடைந்த மற்ற 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |