Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு ஆடம்பரம் வேண்டாம்….. ரூ.500 செலவில் திருமணத்தை முடித்த தம்பதி…. வைரல்….!!!!!

மத்திய பிரதேசம்  மாநிலத்தை சேர்ந்தவர் அங்கித் சதுர்வேதி இவர் இந்தியா ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். தற்போது லடாக் பகுதியில் பணியில் இருக்கிறார். இவருக்கும் போபால் பகுதியைச் சேரர்ந்த சிவாங்கி ஜோஷ் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. சிவாங்கி ஜோஷ் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். தம்பதிகள் இருவரும் நாட்டின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நிலையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்வதற்குள் கொரோனா வந்துவிட்டது. இதனால் கொரோனா இப்பொழுது போகும் அப்பொழுது போகும் என காத்திருந்தனர்.

ஆனால் கொரோனா போவதாக இல்லை. இதையடுத்து இருவரும் சிம்பிளாக திருமணம் செய்ய முடிவு செய்தனர் அதன் படி அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரின் முன்னிலையில் வெறும் ரூ500 செலவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதி பின்பு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். பலர் பல லட்சம் செலவில் திருமணம் செய்து வரும் நிலையில் இந்த தம்பதி வெறும் ரூ500ல் திருமணம் செய்தது பெரும் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |