Categories
தேசிய செய்திகள்

30 நாட்களுக்குள் 75% தடுப்பூசி…. 37% வரை இறப்பை குறைக்கலாம்….ஐசிஎம்ஆர்….!!!!

[4:36 AM, 7/19/2021] +91 94897 11232: g2/95
[4:36 AM, 7/19/2021] +91 94897 11232: இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 30 நாட்களுக்குள் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் இறப்பு எண்ணிக்கை 37 சதவீதம் வரை குறைக்கலாம் என ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. உள்ளூர் நோய் பரவலின் அடிப்படையில் ரேபிட் ரெஸ்பான்ஸ் வேக்சினேசன் என்ற அதிவிரைவு தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி குறைந்தது நபருக்கு 1 டோஸ் மட்டும் போட்டால் கூட ஒரு மாதத்தில் 75% என்ற இலக்கை எட்டி விடலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |