Categories
உலக செய்திகள்

என்ன…! மீண்டும் தேர்தலா…? நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளுத்து வாங்கிய புதிய பிரதமர்…. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போது நியமிக்கப்பட்ட பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.

நேபாளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரதமர் கே.பி சர்மா உட்கட்சியின் மூலம் எழுந்த சதியால் பதவியை இழந்துள்ளார். இதனையடுத்து பதவியை இழந்த கே.பி சர்மா மீண்டும் பிரதமர் பதவிக்கான தேர்தலை அறிவிக்கும்படி அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

அதன்படி அதிபர் பித்யா தேவியும் நாடாளுமன்ற சபையை கலைத்து மீண்டும் பிரதமர் தேர்தல் நடைபெறுவதற்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளார். இந்த செயலை எதிர்த்து எதிர்க் கட்சி உட்பட பல தரப்பினர் நேபாள உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இதனை விசாரணை செய்த நீதிமன்றம், நேபாள நாட்டின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா என்பவரை நியமித்துள்ளது.

இந்நிலையில் ஷெர் பகதூர் தேவ்பா செய்யும் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அதில் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |