காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்யின் செல்போனும் 2017ல் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி நேரத்தில் வெளியானது. ஒன்றிய நீர்வளத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பெயரும் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.