Categories
உலக செய்திகள்

வெறும் 4 நாட்கள்…. 950 க்கும் மேலான பயங்கரவாதிகள் படுகொலை…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…. முக்கிய தகவலை வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 20 க்கும் மேலான மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே பயங்கர மோதல் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பு படையினர்கள் தலிபான்களின் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 950 க்கும் மேலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, கடந்த 2 வாரங்களாக தகாரிலுள்ள தாலுகான் என்னும் நகரத்தில் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்ததோடு மட்டுமின்றி மோட்டார் ரக துப்பாக்கி குண்டுகளை கொண்டு அப்பாவி பொதுமக்களின் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இதனால் அந்த நகரத்திலுள்ள வீடுகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுள்ளார்.

Categories

Tech |