கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு புதிதாக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
கனடா மக்கள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால், அவர்கள் வேறு நாட்டிலிருந்து கனடா திரும்பும் போது தனிமைப்படுத்துதல் தேவையில்லை. எனினும் வேறு விதிமுறைகள் உள்ளன. அதன் படி, Ted Read மற்றும் Dukovich, என்ற தம்பதி, அவர்களின் ஐந்து வயதுடைய பேத்தி Ksenija Callaghan மூவரும் தங்களின் குடும்பத்தாரை பார்க்க கடந்த மாதம் குரோவேஷியாவிற்கு சென்றுள்ளார்கள்.
இணையத்தளத்தில் தகவல்களை பதிவு செய்யவேண்டும். அந்த தகவல்கள் பெறப்பட்ட பின்பு அதற்காக ரெசீப்ட்டும் கொரோனா பரிசோதனை முடிவுகளும் மின்னஞ்சலில் பயணிகளுக்கு அனுப்பப்படும். அந்த ஆதாரங்களை கனடாவிற்கு சென்றவுடன் கனடா எல்லை பாதுகாப்பு அலுவலர்களிடம் காண்பிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாதவர்களும், கனடாவில் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி செலுத்தியவர்கள், நாடு திரும்பியவுடன், 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். விமானத்தில் வந்தவர்கள், அந்த 14 தினங்களில் 3 தினங்களை அரசாங்கம் நியமித்த ஓட்டலிலும் மீதி தினங்களில் அவர்களது வீட்டிலும் தனிமைப்படுத்தவேண்டும்.