ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு செல்கின்றது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேர் நெல்லி துறையில் இருக்கும் படித்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 9 பெரும் ஆற்றின் நடுவே இருக்கும் திட்டு பகுதியில் நின்று கொண்டனர்.
அதன்பிறகு அவர்களின் சத்தம் கேட்டு பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பரிசல்காரர்களின் உதவியுடன் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.