Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்திற்கான மானியம்…. இதுதான் கடைசி தேதி…. கலெக்டரின் தகவல்….!!

வக்பு நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த தொகை கொடுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியமாக 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை கொடுக்கப்படும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத அல்லது ஆட்டோ கியர் கூடிய எஞ்சின் 125 சி.சி. சக்திக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின் தயார் செய்யப்பட்டயாக இருத்தல் வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களின் மனுதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேலை பார்த்து இருக்க வேண்டும். இதனையடுத்து தமிழ்நாட்டை சார்ந்தவர் ஆகவும், 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் கற்றுணர்வுக்கான (எல்.எல்.ஆர்) சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதன்பின் பயனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி அடையாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்பு நிறுவனத்தின் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மானிய உதவி வேண்டி விண்ணப்பம் செய்தால் முன்னுரிமையின்படி ஒருவருக்கு மட்டும் மானியதொகை வழங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார் .

எனவே விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் உரிமை அட்டை, குடும்ப அட்டை , வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், போட்டோ, மாற்றுத்திறனாளியாக இருந்தால் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வி தகுதி சான்று, வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்ற சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பதுடன் சமர்ப்பிக்கவேண்டும். இதனைதொடர்ந்து விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை இந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி என்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |