அனைத்து கோவிலிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து கோவில்களையும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு கோவில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வெளிமாநிலத்திலிருந்து வருகின்ற பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு வரும் அனைத்து ரயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.