ஆடி மாதம் திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கிராம பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிராமத்தின் பூசாரிகள் பேரவையில் மாநில அமைப்பாளரான சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கிராம கோவில் பூசாரிகளுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்களை திறப்பதற்கு அனுமதி வழங்கினாலும், திருவிழாக்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் தற்போது ஆடி மாதம் என்பதால் கிராம பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம கோவில்களிலும் வழக்கத்தின்படி விழாக்கள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு பூசாரிகள் பேரவையின் தஞ்சை மண்டல அமைப்பாளர் பாவேந்தர், மாவட்ட அமைப்பாளர் அப்புவர்மா, இணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.