மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்கப் போவதாக ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒபெக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்களாக குறைந்ததால் விலை உயர்ந்த நிலையில் தற்போது புதிய ஒப்பந்தத்தின்படி மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.