Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… அட்டகாசமான புதிய போஸ்டர்…!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Image

மேலும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் 2022-ஆம் ஆண்டு ரிலீஸாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |