இந்தியா மட்டும் அல்லாமல் தற்போது தமிழகத்திலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அரசு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில் திருவாரூரில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிறப்புறுப்பில் செம்மன் படிந்திருந்தது போன்ற காரணங்களால் குற்றவாளி பிரகாஷை 2018 ல் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் பிறப்பு உறுப்பில் விந்து படிந்திருந்தது என்பதை ஆங்கிலத்தில் semen என்று குறிப்பிடுவதற்குப் பதில் semman என்று மாற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, தற்போது அந்த வழக்கில் பிரகாஷ் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.