பிக் பிரதமர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற பிரிட்டன் செய்தியாளர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதால் அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா குறித்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விடுதியில் 2 வாரங்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மாஸ்க் அணிந்த 30 வினாடிகளுக்குப் பின்புதான் தனக்கான உணவை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அந்நாட்டில் உள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள செவன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் பிக் பிரதமர் என்னும் புகழ் வாய்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரிட்டன் செய்தியாளர் கேட்டி ஹாப்கின்ஸ் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து இவர் கொரோனா தொடர்பான விதிமுறைகள் காரணமாக விடுதியில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்போது உணவு வழங்க வருபவர்களிடம் தான் ஆடை இன்றியும், மாஸ்க் இன்றியும் நின்றுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் உள்துறை அமைச்சகம் கேட்டி ஹாப்கின்ஸ் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதாக கூறி பிரிட்டன் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.