கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சவுதி அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை.
மெக்காவில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே சவுதி அரசாங்கம் அந்நாட்டில் வாழும் 60,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் மெக்காவிலுள்ள ஹாஜி ஒருவர் கூறியதாவது இங்கு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வருகின்ற 6 தினங்களுக்கு மெக்காவிலுள்ள ஹாஜிகள் தங்களுடைய ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், சவுதியில் வாழும் 200க்கும் அதிகமான இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் நடப்பாண்டில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.