ராமநாதபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அடிக்கப்பட்ட அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள தாமோதரபட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடைக்கு அருகே ஊருணி உள்ள நிலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு ஊருணி கரையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பல்வேறு தொல்லைகள் வருகின்றது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் ஊருணி டாஸ்மார்க் கடை ஊருணி அருகில் உள்ளதால் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து தற்காலிகமாக அரசு மதுபான கடையை சுற்றிலும் தகரம் வைத்து அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏனினும் பொதுமக்கள் மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.