நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மது காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் 77 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மது அருந்துவதன் மூலம் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு சுரக்கும் நச்சு மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.