தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு உரிமைகள், சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாகுபாடு காட்டும் பள்ளிகள் மீதும் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.