Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் அனிதா… சூப்பர் வீடியோ…!!!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் பிக்பாஸ் பிரபலம் அனிதா இணைந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் அனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் சமிர் அஹமது கதாநாயகனாகவும் தர்ஷினி கௌடா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தற்போது இந்த சீரியலில் அனிதா என்ட்ரி கொடுக்கும் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |