ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராகவும், மீனவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற கட்டணம், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் மற்றும் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்ற திட்டங்கள் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு ஜேசுராஜா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மீனவ சங்க தலைவர்களான தேவதாஸ், சகாயம், எடிசன், எமரிட், தட்சிணாமூர்த்தி, இருதயம் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று துறைமுக பகுதியில் மீனவர்கள் விசைப்படகுகள் கருப்பு கொடியை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.