Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீ எங்கேயும் தப்பிக்க முடியாது…. சிக்கிய104 குற்றவாளிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு….!!

தலைமறைவாக இருந்த 104 குற்றவாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொலை முயற்சி, கொலை கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி 10 தனிப்படைகள் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தனிப்படை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை, தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் தலைமறைவாக இருந்த ஒரே நாளில் 104 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட 104 குற்றவாளிகளில் 61 பேர் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |