Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் நிற்க கூடாது…. மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்…. காவல்துறையினரின் அறிவுரை…!!

மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு மார்க்கெட் பகுதியில் திரண்டுள்ளனர். அப்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன் பின் காவல்துறையினர் அங்கு வந்த பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |