நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த், “பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க. ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” என்று தமிழில் கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.