பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும்.
இந்த ஆவணத்தில் நிலத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற பல முக்கியமான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டாவின் முதன்மை நோக்கம் நிலம் நன்செய் நிலமா? அல்லது புன்செய் நிலமா? எனும் வகையைப் பற்றியது. பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டுமே தமிழக அரசால் வழங்கப்படும். கடந்த 2015 ஆம் வருடத்தில், பட்டா மற்றும் சிட்டாவை தேவையான தகவல்களுடன் ஒரே ஆவணமாக அரசாங்கம் இணைத்தது.
பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டையும் ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1.முதலில் வருவாய் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://eservices.tn.gov.in/ என்பதை பார்க்கவும்.
2.பின்னர் பட்டா நகலை பார்க்க, நிலஉரிமையை பார்வையிட என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதையடுத்து புதிய பக்கத்தில், மாவட்டம் மற்றும் பகுதி வகையை கிராமப்புறமா? நகர்ப்புறமா? என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் “சமர்ப்பி” என்பதைக் ok செய்யவும்.
4.அதில் மாவட்டம், தாலுகா, நகரம், வார்டு, தொகுதி, கணக்கெடுப்பு எண், துணைப்பிரிவு எண் போன்ற கேட்கப்படும் அனைத்து விவரங்களை உள்ளிடவும். பின்னர் அங்கீகார மதிப்பை உள்ளீடு செய்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
5.பின்னர் தேவையான எல்லா விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, நிலத்தின் தகவலுடன் ஆன்லைனில் ஒரு சான்றிதழை வழங்கப்படும். அந்த சான்றிதழில் நிலத்தின் வகை, கட்டுமான வகை, கணக்கெடுப்பு எண், இடம், நகராட்சி கதவு எண் போன்ற தகவல்கள் குறிப்பிட்டிருக்கும்.
இதில் பட்டா சிட்டா மட்டுமல்லாது FMB எனப்படும் நில அளவை புலப்படத்தையும் பார்க்க முடியும். மேலும் இவற்றை தேவைப்படுபவர்கள் தங்களது செல்போன் போன்ற சாதனங்களில் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.