துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி 9 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருக்கும் அறையில் சிறுமி துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி நித்யஸ்ரீயின் கழுத்தில் துப்பட்டா இறுக்கியதால் மூச்சு விட முடியாமல் சிறுமி மயங்கி கீழே விழுந்து விட்டார்.
இதனை அடுத்து அறையை விட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சிறுமியின் தாயார் ராஜலட்சுமி அங்கு சென்று பார்த்த போது தனது மகள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.