Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குழந்தை தொட்டிலில் பற்றிய தீ…. பதறி எழுந்த குடும்பத்தினர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மின் கசிவினால் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் அணைத்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனை அடுத்து கனிமொழி தனது குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

மேலும் இவர்களது ஆறு மாத குழந்தை தமிழினி தூங்கிக்கொண்டிருந்த தொட்டிலிலும் தீ பிடித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கனிமொழி உடனடியாக தனது குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து விட்டார். அதன் பின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கனிமொழி அக்கம்பக்கத்தினர் உதவியோடு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டார். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்சாதன பொருட்கள் போன்ற அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது.

Categories

Tech |