Categories
தேசிய செய்திகள்

BREAKING: வேலையில்லாத இளைஞர்களுக்கு… மிக மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலையை இழந்த இளைஞர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் கிடைப்பதால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமத்திருந்தனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |