Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் சிவஞானசுந்தரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக காலில் ஒரு புண் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது காலில் ஏற்பட்ட புண் குணமாகாததால் நீண்ட நாட்களாக சிவஞானசுந்தரம் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்த மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |