இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.
மத்திய அரசு பாதுகாப்பு துறை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அளவுக்கதிகமான நிதி ஒதுக்கப்படும் பாதுகாப்பு துறையில் பல்வேறு புதிய ரக தொழில்நுட்பத்தை அமுல் படுத்திவருகின்றது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானம் மணிக்கு 2205 கிலோமீட்டர்கள் பறக்கக் கூடியது.
பெங்களுருவில் உள்ள இந்துஸ்தான் வான் மேம்பாட்டு நிறுவனம் தளத்தில் இருந்து தொடங்கிய இதன் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகவும், இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் வகையிலும் விமானத்தில் வைஸ் மார்ஷல் , என் திவாரி உடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறக்கின்றார். தேஜஸ் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.