தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. சில சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத மின்கட்டணத்தை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. காப்பு வைப்பு தொகை வசூலிக்கலாம் என்ற உத்தரவை திரும்பப் பெறப்படுவதாக கூறியுள்ளது. மின் இணைப்புப் பெறும்போது தெரிவித்திருந்த அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.