Categories
பல்சுவை

வெறும் 15 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்…. எப்படி விண்ணப்பிப்பது?….!!!!

ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும். குடும்ப வருமானத்தைப் பொறுத்து 5 வகை ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, உங்களுக்கு ஏற்ற ரேஷன் கார்டை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். கார்டு எந்த வகையைச் சார்ந்தது என ரேஷன் கார்டில் இருக்கும் குறியீட்டைப் பார்த்து தெரிந்து உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

5 வகை ரேஷன் கார்டுகள்

பிஎச்எச் (PHH) என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.

பிஎச்எச் – ஏஏஒய் (PHH – AAY) என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டிற்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றலாம்.

என்பிஎச்எச் (NPHH) என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டிற்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

என்பிஎச்எச் – எஸ் (NPHH – S) என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டில் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைப் பெறலாம். ஆனால், அரிசி கிடைக்காது.

என்பிஎச்எச் -என்சி (NPHH – Nc) என்ற குறியீடுடைய ரேஷன் கார்டை அடையாள அட்டையாகவும், முகவரிக்கான சான்றுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அடைடையைக் கொண்டு நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது

 

பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க வேண்டும்

புதியதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி தனியாக பிரித்து கார்டு வாங்குவது என்ற விவரத்தை முதலில் தெரிந்து கொள்வோம். இதற்கு முன்னதாக உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை கொடுத்து (திருமண பதிவு சான்று அல்லது தக்க சான்றுகள்) பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னரே புதிய கார்டை விண்ணப்பிக்க முடியும். தமிழ் நாட்டில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது.

 

கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே இது மிக முக்கியம். ஆனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகக் கடினமான ஒன்று. அதற்கு நீண்ட காலம் ஆகும். நீங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இதனை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ரேஷன் கார்டு வாங்கும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு https://tnpds.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

மேலும் ரேஷன் கார்டுகளில் இரண்டு வகை உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக ஒரு தனி ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு தனியாக ஒரு ரேஷன் கார்டு உள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் தகவல்களை சரியாக பதிலளிக்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை நிரப்ப வேண்டும். குறிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம்.

Categories

Tech |