Categories
தேசிய செய்திகள்

இன்று உங்கள் வங்கிக்கணக்கிற்கு…. ரூ.1500 செலுத்தப்படும் – புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது.

இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 நேற்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சர்வர் பழுது காரணமாக வங்கி கணக்கில் பணம் வராதவர்களுக்கு இன்று பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |