Categories
தேசிய செய்திகள்

Gold ETF…. மழைபோல் கொட்டும் பணம்… இதுதான் சரியான நேரம்… இதுல முதலீடு செய்யுங்க…!!!

ஜூன் காலாண்டில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 1328 கோடி ஒரு ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் காலாண்டில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 1328 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக தங்க ஈடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த நிதி ஆண்டிலும் இத்திட்டத்தில் முதலீடு உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் காலாண்டில் இந்தத் திட்டத்தில் 2040 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டிருந்தது. கொரோனா நெருக்கடி காலத்தில் மற்ற முதலீடுகளை காட்டிலும் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்தனர்.

இந்தத் திட்டத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் பணத்தை கொட்டினர். தற்போது இரண்டாம் அலை காலத்திலும் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டை காட்டிலும் ஜூன் காலாண்டில் ஈடிஎஃப் திட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 18.32 லட்சம் அதிகரித்துள்ளது. ஈடிஎஃப் என்பது தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் போன்றது. பங்குச் சந்தையிலேயே தங்க ETF நிதிகளில் முதலீடு செய்யலாம்.

Categories

Tech |