24_ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய மேற்கு வங்கக் கடலிலும், தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சியானது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடிக்கின்றது.இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில்
வருகின்ற 24_ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.