Categories
உலக செய்திகள்

என்ன…! மீண்டும் புதிய தொற்றா…? சீனாவில் உயிரிழந்த மருத்துவர்…. ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

சீனாவின் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஒருவர் குரங்கு “பிவி” தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள விலங்குகள் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மார்ச் மாதத்தில் உயிரிழந்த 2 குரங்குகளை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து இவருக்கு வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விலங்குகள் ஆராய்ச்சி நிலைய மருத்துவர் திடீரென கடந்த மே மாதம் 27-ம் தேதியன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் குறித்து ஆய்வு செய்த சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியாவது, ஆராய்ச்சி நிறுவன மருத்துவரின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சோதனை செய்ததில் அவர் குரங்கு “பிவி” தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த குரங்கு “பிவி” தொற்றாலையே அந்த விலங்குகள் ஆராய்ச்சி நிலைய மருத்துவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆராய்ச்சி நிலைய மருத்துவருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |