Categories
சினிமா

BREAKING: ஆபாச படங்கள்: மிக பிரபல நடிகையின் கணவர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

ராஜ்குந்த்ரா குற்றவாளி என நிரூபிக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து நேற்று இரவு திடீரென போலீசார் அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு ஆபாச படங்களை தயாரித்து ராஜ்குந்த்ரா அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த ஆபாச படங்கள் சந்தா முறையில் இயங்கும் செயலிகளில் விற்பனை செய்யப்பட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆபாச பட வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், மற்றும் தயாரிப்பாளர்களையும் போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட தயாரிப்பு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதுது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது ஏற்கனவே பணமோசடி உள்பட ஒருசில குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |