தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை இப்போதுள்ள சூழ்நிலையில் திறக்க முடியாத நிலை உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். மேலும் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பதே எங்களின் எண்ணம் என்று அவர் கூறியுள்ளார்.