Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 21-ந் தேதி வரை தடை உத்தரவு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடு விட்டு நாடு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் அவசியத் தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 21-ம் தேதியுடன் இந்தத் தடை முடிவுக்கு வரும் நிலையில், மேலும் ஒரு மாதம் தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |