தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் உடனடியாக கீழே திரும்ப வேண்டும். மலையில் யாரும் தங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.