Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு இனி இதுதான் நிலை… மாதர் சங்கத்தினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாதர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் தங்களின் தலையில் விறகுகளை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதா கோவில் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து நகர குழு உறுப்பினர் ஜெயமங்கள வள்ளி தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, நகர பொருளாளர் பழனியம்மாள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது  பெண்கள் தங்களது தலையின் மீது விறகுகளை சுமந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும், சமையல் எரிவாயுவின் விலை மற்றும் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பதால் கூலித் தொழிலாளிகளின் பெண்கள் எப்படி சமையல் எரிவாயு வாங்கி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்வுக்கு திண்டாடும் நிலையில் இருப்பதால் அதை எவ்வாறு வாங்கி பயன்படுத்த முடியும் என்றும், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |