Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் 2021 : கொட்டி தீர்த்த மழையால் ரத்தான போட்டி …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல்  டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில்  நேற்று நடந்த  தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கோவை  அணியின் தொடக்க வீரரான கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடி ஆட்டத்தை காட்டினார் .இவர் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் , 2 சிக்சர்கள் அடித்து விளாசி  33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கவின், சாய் சுதர்ஷன் உடன் ஜோடி சேர  இருவரும்  அதிரடி ஆட்டத்தை காட்டினர் .

இதில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 5 சிக்சர்கள் 8 பவுண்டரிகளை அடித்து விளாசி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக்கான் ஒரு ரன்னிலும் கவின் 33 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் கோவை அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்            இழப்புக்கு 168 ரன்களை எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேலும்  மைதானத்தில் ஈரப்பதத்தை உலரவைக்க எடுத்த முயற்சியும் வீணானது .இதனால் இரவு 11 மணிக்கு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்  பகிர்ந்தளிக்கப்பட்டது.

Categories

Tech |