புதிய வகை ஏவுகணையான சிர்கான் இன்று ஆர்டிக் கடல் பகுதயில் நிற்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது.
ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் அங்கு மோசமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த வருங்கால ஆயுதமான சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் வகை ஏவுகணைகள் ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும். இந்த வகை ஏவுகணைகள் ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதாகும். இதனை அடுத்து இன்று ரஷ்யா ஆர்டிகில் உள்ள வெள்ளை கடலில் நிற்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவுகணையானது செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சிர்கான் ஏவுகணையானது 350 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கியது என்று அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் பிறந்தநாளை முன்னிட்டு சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதில் அவர் கூறியதாவது “எங்களின் ராணுவப் படைகளின் வாழ்க்கையில் மட்டுமின்றி ரஷ்யா முழுவதும் சிர்கானின் சோதனை வெற்றியானது பிரம்மாண்டமான நிகழ்வு” என கூறியுள்ளார்.