மாமியார் மற்றும் மருமகளுக்கு மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரகடுவங்குடி காலனி தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மருமகள் இருக்கின்றார். இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அகிலா குளித்துக் கொண்டிருந்த நிலையில், மணிமேகலை பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு உள்ள மின் கம்பம் அறுந்து விழுந்து அகிலா, மணிமேகலை மீது விழுந்தது.
இதில் 2 பேருக்கும் மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாமியார்-மருமகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின் மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து தகவலறிந்த மின் வாரியத்தினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அதனை சரி பார்த்தனர்.