உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சித்ராவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற மூர்த்தி தீயில் சித்ரா எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக சித்ராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சித்ரா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.